—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மலையக நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறப்பு

காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, விமல சுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று (26) முதல் தொடர்ந்து வான்பாய்ந்து வருகின்றது.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் வான்பாயும் மட்டத்தை அண்மித்துள்ளதாகப் பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.