தேசிய உற்பத்தித்திறன் விருது விழா 2026
தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கல் விழா 2026 இன் கீழ், தகைமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (27.10.2029) கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், ஏனைய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு மொத்தம் 247 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.