—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மழையால் சிகிச்சைப் பிரிவு தற்காலிக இடமாற்றம்

மழையால் சிகிச்சைப் பிரிவு தற்காலிக இடமாற்றம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவு, மழை காரணமாகத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சிகிச்சைப் பிரிவு 3ஆம் இலக்க நுழைவாயிலுக்கு (Gate No. 03) அருகில் தற்காலிகமாக இயங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தரும் நோயாளர்கள் அனைவரும் 3ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக வந்து மருத்துவச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.