மின் கசிவால் தீ விபத்தா? பொலிஸார் விசாரணை
ஹட்டன் – டிக்கோயா, மணிக்கவத்த தோட்டத்தில் அமைந்துள்ள தொடர் குடியிருப்பில் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
12 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவதற்குத் தோட்டத் தொழிலாளர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார், மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

Comments 0
Be the first to comment.