யாழ். மாணவனுக்கு சர்வதேச வாய்ப்பு

இலங்கைப் பாடசாலை சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான சதுரங்கச் சுற்றுப்போட்டி, அனுராதபுரம் ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் 23, 24, 25ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இதில், 6 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சிறீஷனாத் தீக்ஷிகன், ஏழு சுற்றுகளில் ஐந்தில் சிறப்பாக விளையாடி (Merit) வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம், 2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் இதற்கு முன்னரும் பல சதுரங்கப் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.