—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மூன்று நாள் மின்வெட்டு

மூன்று நாள் மின்வெட்டு

நாட்டின் நான்கு வலயங்களில் இன்று (19) முதல் மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் (National System Operator – NSO), பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் எரிசக்தி அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்த தகவலின்படி, முன்மொழியப்பட்டுள்ள மின்வெட்டு மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தக் காலப்பகுதிக்குள் நான்கு வலயங்களிலும் தலா ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதே இக்கோரிக்கையின் நோக்கமாகும்.

மின்வெட்டினால் பாதிக்கப்படும் வலயங்கள் மற்றும் மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் முறை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.