இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளதால், இன்று மாலை முதல் நாட்டை ஊடறுத்து மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும். மேலும், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலால் அதிக வெப்பநிலை உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பிராந்தியங்களில் மழை
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையிலிருந்து காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும். இதனால், குறித்த கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அத்தகைய வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Comments 0
Be the first to comment.