—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

யாழ்ப்பாணத்தில் இரு நாட்டுத் தூதுவர்கள்

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளின் தூதுவர்கள், இன்று பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நேற்று தனித்தனியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இவ்விரு நாடுகளின் தூதுவர்களும், தமது விஜயத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறை கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸ் உயர் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இவ்வாறான முக்கிய சந்திப்புகளை நிறைவு செய்த நிலையிலேயே, தூதுவர்கள் இருவரும் இன்று பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.