வயல் காவலில் உயிரிழந்த விவசாயி

மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் நெல் வயலில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த 61 வயதுடைய விவசாயி ஒருவர், நேற்று புதன்கிழமை (21) இரவு காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு, கொடுவாமடு, பங்குடாவெளி நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று இரவு, கொடுவாமடு வயல் பகுதியில் உள்ள தனது நெல் வயலுக்குக் காவல் காப்பதற்காக அவர் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இதன்போது, வயலுக்குள் திடீரெனப் புகுந்த காட்டுயானை அவர் மீது தாக்குதல் நடத்தியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் காணப்படும் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.