—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நவம்பர் வரை விமான சேவைகள் ரத்து

நவம்பர் வரை விமான சேவைகள் ரத்து

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக, கொழும்புக்கும் சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான விமான சேவைகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான சூழ்நிலை நிலவுவதாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள, இலங்கைக்குள் 1979 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற இலக்கத்துடனும் பயணிகள் தொடர்புகொள்ளலாம்.

மேலும், வட்ஸ்அப் உரையாடல் வசதிக்கு மட்டும் +94 74 444 1979 என்ற இலக்கத்தைப் பயன்படுத்தலாம். பயண முகவர்களுடனும் தொடர்புகொள்ள முடியும்.

அத்துடன், மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.srilankan.com ஐயும் பார்வையிடலாம்

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.