—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

விக்னேஸ்வரனின் மகனுக்கு புதிய நியமனம்!

விக்னேஸ்வரனின் மகனுக்கு புதிய நியமனம்!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் புதல்வரான நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணியாகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரியவருகின்றது.

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடந்த சில வருடங்களாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியுள்ளார்.

இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், கட்டுமானச் சட்டங்கள் தொடர்பான நடுவர் மன்றங்கள் உள்ளிட்ட பல சர்வதேச நடுவர் மன்றங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

ஒரு காலத்தில், ஓமான் சுல்தானகத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தில் (2011–2014) சட்ட வல்லுநராகப் பணியாற்றிய இவர், அங்கு பல கட்டுமானத் திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்.

நிர்மலகுகன் விக்னேஸ்வரன் அமெரிக்காவிலுள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இராஜதந்திரத்தில் முதுகலைப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும், இலங்கை சட்டக் கல்லூரியில் இணையச் சட்டம் மற்றும் கட்டுமானச் சட்டம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.