—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

உணவகத்தில் அம்பலமான சுகாதாரக் குறைபாடுகள்!

மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின்போது, குறித்த உணவகத்தில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக, உணவுகள் சுகாதாரமற்ற முறையில் கையாளப்பட்டமை, உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை, அதிகளவிலான ஈக்கள் காணப்பட்டமை, உணவைக் கையாளும் பணியாளர்கள் கையுறைகள் மற்றும் தலை உறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணியாமை, வடிகால்கள் முறையாகத் துப்புரவு செய்யப்படாமை உள்ளிட்ட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், காலாவதியான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமையும் ஆய்வின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவகத்திற்கு எதிராகப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.