—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வீதிப் பிரச்சினையை நேரில் ஆராய்ந்த எம்.பி.

புதுக்குடியிருப்பு மேற்கு 04ஆம் வட்டாரம் கிராம அலுவலர் பிரிவில், பிரதேச செயலாளரின் விடுதிக்கு எதிரே உள்ள முதலாம் ஒழுங்கை மற்றும் புதுக்குடியிருப்பு 08ஆம் வட்டாரம், மந்துவிலில் குழந்தையேசு கோவில் வீதியின் 02ஆம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள 400 மீற்றர் நீளமான வலதுபக்க இரண்டாம் ஒழுங்கை ஆகிய வீதிகள் சீரற்றுக் காணப்படுவதால், தாம் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.

குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைக்குச் செல்பவர்கள், பிரதேச செயலகத்திற்குச் செல்பவர்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், சீரற்றுக் காணப்படுகின்ற குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைபாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்துகொண்டார். குறித்த வீதிகளைச் சீரமைப்பது தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.