புதையல் தோண்டிய மூவர் அதிரடியாகக் கைது

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பீல்ல பகுதியில், புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிபிலை, தெல்கொட மற்றும் ஊராபொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 39 மற்றும் 45 வயதுடையவர்களாவர்.
கெப்பட்டிபொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாகக் கெப்பட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.