—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் உ**யிரிழப்பு

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் உ**யிரிழப்பு

நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உ**யிரிழந்துள்ளனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகேவிட்ட பகுதியில் அமைந்துள்ள கல்ல சொரொவ்வு அணைக்கட்டுக்கு அருகில், நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உ**யிரிழந்துள்ளார்.

கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உ**யிரிழந்துள்ளார்.

மற்றுமொரு சம்பவம் வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள குளத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 63 வயதுடைய பெண் ஒருவர் நீரில் மூழ்கி உ**யிரிழந்துள்ளார். அவர் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனியாக வசித்து வந்ததுடன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் குளத்திற்கு அருகால் சென்றபோது தவறி விழுந்ததால் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் கம்பஹா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.