போ**தைப்பொருள் பாவித்த இரு சாரதிகள் கைது

யாழ்ப்பாணம் – மண்டைதீவு சோதனை முகாம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போ*தைப்பொருள் பரிசோதனையின்போது, ஹெரோயின் மற்றும் கஞ்சா பாவித்த குற்றச்சாட்டில் இரண்டு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவினரும் ஊர்காவற்றுறை பொலிஸாரும் இணைந்து நேற்று திங்கட்கிழமை இந்தப் பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மண்டைதீவு பகுதியில் வாகனச் சாரதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது, பஸ் சாரதி ஒருவரும் மற்றுமொரு வாகனச் சாரதியும் ஆபத்தான போ*தைப்பொருள்களான ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றைப் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக வீதி விபத்துகள் பாரியளவில் அதிகரித்து வருகின்ற நிலையில், வாகனச் சாரதிகளின் இத்தகைய போ*தைப்பொருள் பாவனையும் அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.