—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஹட்டன் நகர சபையில் விசேட அமர்வு

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் விசேட சபை அமர்வு நேற்று 03ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது, நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மக்கள் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் தீவிரமான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது வட்டாரங்களுக்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நகர சபைத் தவிசாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, கட்சி மாறிய கலாநிதி அழகமுத்து நந்தகுமார் சபைக்கு வருகை தந்த நிலையில், அவரை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நகர சபை உறுப்பினர் பிரபாகரன், கலாநிதி அழகமுத்து நந்தகுமாருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதன்போது, நகர பிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதிய கட்சியுடன் இணைந்து நகர சபையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.