—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

105 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

105 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரடைஸ்வத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிங்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 78.75 லீற்றர் (105 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பிங்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.