—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஒரே நாளில் நால்வர் உ**யிரிழப்பு; யாழில் பெரும் சோகம்

ஒரே நாளில் நால்வர் உ**யிரிழப்பு; யாழில் பெரும் சோகம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நால்வர் உ**யிரிழந்துள்ளனர்.

தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் இரு இளைஞர்கள் உ**யிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மற்றுமொருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது மதில் இடிந்து இருவர் மீதும் விழுந்ததால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உ**யிரிழந்துள்ளனர்.

இதில் சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுடைய பிரதீப் சஞ்சய் மற்றும் 36 வயதுடைய ரஜீவன் ஆகியோரே உ**யிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அளவெட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் போதை ஊசி பயன்படுத்திய நிலையில் உ**யிரிழந்துள்ளார்.

நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த குறித்த இளைஞர், நேற்றுமுன்தினம் மற்றுமொரு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று போதை ஊசியைப் பயன்படுத்தியபோது ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு காரணமாக அவர் உ**யிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அவரது ச*டலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வறுத்தலைவிளான் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது பின்னால் வந்த உந்துருளி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான உ**யிரிழந்தவர்களின் சடலங்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.