—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

15 பேருக்கு வீட்டுத்திட்டக் காசோலைகள்!

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் “வாழ்வுக்கு பலம்” திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டக் காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதன்படி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 11 பேருக்கும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 4 பேருக்கும் காசோலைகள் வழங்கப்பட்டன.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அல்லது காப்பகங்களில் இருந்து வெளியேறி, 18 வயதைப் பூர்த்தி செய்து சமூகத்துடன் இணையும் இளைஞர், யுவதிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்வாங்கப்படுகின்றனர்.

இந்த நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் எச். சத்தியஜீவிதா கலந்துகொண்டு பயனாளிகளுக்குக் காசோலைகளை வழங்கி வைத்தார்.

மேலும், கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் தேவநாயகம் சுஜீன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.