—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

திருட்டு வாகனங்கள் சிக்கின: இருவர் கைது!

திருட்டு வாகனங்கள் சிக்கின: இருவர் கைது!

முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, வத்தளை பகுதியில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட வாகனங்களின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்ட இருவரும், 25 மற்றும் 28 வயதுடைய வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி பதிவான முச்சக்கரவண்டி திருட்டு முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 5 முச்சக்கரவண்டி எஞ்சின்கள், 2 முச்சக்கரவண்டி சேஸிகள், ஒரு முச்சக்கரவண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பல இலக்கத்தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.