24 மணிநேரத்தில் திருடன் கைது
கடந்த 25ஆம் திகதி தலவாக்கலை நகரில் உள்ள கடையொன்றில் பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர், பல இணையதளங்களிலும் தேசிய பத்திரிகைகளிலும் நேற்று செய்தி வெளியானதைத் தொடர்ந்து, 24 மணித்தியாலங்களுக்குள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான செய்தி பரப்பப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் உடுபூசல்லாவ, வால்டீமார் தோட்டப் பிரிவில் (Waldemar Factory Division) நடமாடிக்கொண்டிருந்தபோது பிரதேசவாசிகளின் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பிரதேச முக்கியஸ்தர்களும் இளைஞர்களும் இணைந்து சந்தேகநபரைப் பிடித்து உடுபூசல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபரை விரைவாக அடையாளம் காண்பதற்கும் கைது செய்வதற்கும் தேசிய பத்திரிகைகள் மற்றும் இணையதளச் சேவைகள் ஊடாக வெளியிடப்பட்ட செய்திகள் பெரும் உதவியாக இருந்ததாகத் தெரிவித்து, பிரதேச இளைஞர்களும் பொதுமக்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தமது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.