ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

24 கிராம் ஹெரோயின் போ**தைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட பிரதிவாதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
நீண்டகால வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு கொழும்பு, மோதரை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, குறித்த பிரதிவாதி 24 கிராம் ஹெரோயின் போ**தைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

Comments 0
Be the first to comment.