—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (27) சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், குளிரூட்டிகள், தட்டச்சுப் பொருட்கள் மற்றும் ஏனைய வாழ்வாதார உபகரணங்கள் என மொத்தம் 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட உதவியாளர் என்.எம். நௌஷாட்டின் நெறிப்படுத்தலில், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பொருட்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் எஸ். றியாபா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், வங்கி முகாமையாளர் ஏ.எம். இக்றாம், சாய்ந்தமருது பிரதேச செயலக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் ஆசிரியர் எம். சியாம், வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ. ஹில்மி, வங்கிச் சங்க உதவி முகாமையாளர் ஏ.ஆர்.எம். ஜாபீர், சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சந்தைப்படுத்தல்) எம்.ஐ. சர்பீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அஸ்வெசும பயனாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதார ரீதியாகக் குடும்பங்களை வலுவூட்டுதல் மற்றும் அவர்களைச் சுயசார்பு வாழ்க்கையை நோக்கி முன்னேற்றுதல் ஆகிய உயரிய இலக்குகளைக் கொண்டே இந்தச் சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.