—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அதிவேக நெடுஞ்சாலையில் பெண் உயிரிழப்பு

அதிவேக நெடுஞ்சாலையில் பெண் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தல நோக்கிப் பயணித்த வேனின் சாரதி உறங்கியதால், அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த லொறியின் பின்புறத்தில் வேன் மோதியுள்ளது. இந்த விபத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 93.6 கிலோமீற்றர் மைல்கல் அருகே நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த வேன் சாரதியும், வேனின் முன்பக்க இடது இருக்கையில் பயணித்த அவரது தாயாரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது தாயார் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கதிர்காமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பின்னதூவ அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.