இன்றைய வானிலை

இலங்கைக்கு அருகிலுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, தற்போது குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இன்று நாடு முழுவதும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இலங்கையைச் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளைக் கவனிக்குமாறு பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேல், சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments 0
Be the first to comment.