—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அறநெறிப் பாடசாலைகளுக்கு நிதியுதவி

இந்து சமய கலாச்சாரத் திணைக்களத்தின் ஊடாக, அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரு அறநெறிப் பாடசாலைகளுக்கும் தலா 50,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கும் இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலை மற்றும் கண்ணகி அறநெறிப் பாடசாலை ஆகியவற்றுக்கே இப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இந்து சமய கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர், குறித்த அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்து சமய கலாச்சாரத் திணைக்களத்தின் இவ்வாறான உதவிகள், அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், மாணவர்களின் சமய மற்றும் ஒழுக்கக் கல்வியை ஊக்குவிப்பதற்கும் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஆலையடிவேம்பு பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை முன்னெடுப்பதில் பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.