—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

குழந்தை உணவில் அதிரடி மாற்றம்

குழந்தை உணவில் அதிரடி மாற்றம்

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) யோசனை தெரிவித்துள்ளது.

தற்போதைய நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் சர்க்கரையைச் சேர்ப்பதற்கு நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளது. இந்நிலையில், புதிய விதிமுறைகள் மூலம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் தரத்தை மேலும் தீவிரமாகக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுவயதிலேயே ஏற்படும் உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன், தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக இந்தியாவில் உணவகங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி நிறுவனங்கள் மீதான சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனுடன், உணவுப் பொதிகளில் எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.