அல்-அஸ்ஹர் பழைய மாணவர்களுக்கு அழைப்பு!

1869ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாகச் செயற்பாடற்று இருந்த பழைய மாணவர் சங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான விசேட கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இப்பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து, பாடசாலையின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வு ஆகியவற்றுக்குப் பங்களிக்கும் பலமிக்க அமைப்பை உருவாக்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
எனவே, அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற அனைத்து பழைய மாணவர்களும், பாடசாலையின் நலன்விரும்பிகளும் இம்முயற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று, தாய்ப் பாடசாலையின் மறுமலர்ச்சிக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சங்கம் அமைக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், இச்செய்தியைத் தங்களது சக பழைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் பகிர்ந்து, இக்கூட்டம் வெற்றிபெற ஒத்துழைக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.