—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

உணவகங்களில் அதிரடிச் சோதனை!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நகர சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சில உணவு கையாளும் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, உணவு தயாரிக்கப்படும் இடங்களில் ஈக்களின் நடமாட்டம், எலிகளால் உணவு மாசுபடக்கூடிய அபாயம், உணவுப் பொருட்களைச் சேமிக்கும் இடங்களில் காணப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள், உரிய அனுமதிகள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ அறிக்கைகள் இல்லாமை போன்ற விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், உணவு தயாரிக்கும் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமை, அசுத்தமான பாத்திரங்களில் உணவைச் சேமித்தல், உணவுப் பொதியிடுவதற்குப் பொருத்தமற்ற பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான குறைபாடுகள் உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் பாதிப்பதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனையடுத்து, சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.