—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்

தென் அந்தமான் கடல் பிராந்தியம் மற்றும் நிகோபார் தீவுகளுடன் இணைந்து காணப்படுகின்ற தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தீவிரமடைந்து, இன்றைய தினம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து, இரு தினங்களில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் இல்லை. இருந்தபோதிலும், வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பிராந்தியங்களுக்குச் செல்லும் மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையிலிருந்தும், நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்தும் அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்தும் காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.