இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், மன்னார் மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அச்சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

Comments 0
Be the first to comment.