19.8 கிலோ போ**தைப்பொருளுடன் ஒருவர் கைது
இலங்கைக்கு கடல் வழியாகக் கடத்துவதற்காக இந்தியாவின் தமிழ்நாடு, எஸ்.பி. பட்டினம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான 19.8 கிலோகிராம் ஹஷீஷ் போ*தைப்பொருளை பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பில், ஏற்கனவே போ*தைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவரும் தலைமறைவாக இருந்தவருமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை உட்கோட்டம், எஸ்.பி. பட்டினம் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமாக போ*தைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக ஹஷீஷ் போ*தைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. பட்டினம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பொலிஸ் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 2 கிலோகிராம் ஹஷீஷ் போ*தைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது வீட்டில் மேலும் போ*தைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து, அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 17.8 கிலோகிராம் ஹஷீஷ் போ*தைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடற்கரை மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தமாக 19.8 கிலோகிராம் ஹஷீஷ் போ*தைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இவை இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போ*தைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர், திருவாடானை தளிர் மருங்கூர் பகுதியைச் சேர்ந்த மனோ (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே தொண்டி மற்றும் எஸ்.பி. பட்டினம் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட போ*தைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.பி. பட்டினம் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட முந்தைய வழக்கொன்றில் 15 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் மனோ தலைமறைவாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் பெருமளவிலான ஹஷீஷ் போ*தைப்பொருளுடன் சிக்கிய அவரைப் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட ஹஷீஷ் போ*தைப்பொருளின் மூலாதாரம், இலங்கைக்குக் கடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட வழிமுறை, கடத்தலுக்கு உதவியவர்கள் மற்றும் சர்வதேசக் கடத்தல் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எஸ்.பி. பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19.8 கிலோகிராம் ஹஷீஷ் போ*தைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஏற்கனவே போ*தைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடலோரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments 0
Be the first to comment.