இன்றைய வானிலை

இலங்கைக்கு அண்மையில் வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் தளம்பல் நிலை, அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழமுக்கப் பிரதேசமாக விருத்தியடையக்கூடும். இதன் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்படும்.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களிலும் இன்று முதல் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்படும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை, பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கவனத்திற்கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25–35 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையிலிருந்து தென்மேற்குத் திசையினூடாகக் காற்று வீசும்.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60–70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Comments 0
Be the first to comment.