இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாகக் காணப்பட்ட தாழ் அமுக்கம் மேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்கின்றது. எவ்வாறாயினும், அதன் தாக்கம் இன்றும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களுக்கான எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்த தென்கிழக்குப் பகுதியில் இன்று மற்றுமொரு தாழ் அமுக்கப் பிரதேசம் உருவாகின்றது. பின்னர் இது மேலும் தீவிரமடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கடலுக்குச் செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைக் கவனத்திற்கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Comments 0
Be the first to comment.