—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

முன்பள்ளிக் கல்வியில் புதிய எச்சரிக்கை

முன்பள்ளிக் கல்வியில் புதிய எச்சரிக்கை

முன்பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடவாரியாகத் தனியார் வகுப்புகளை நடத்துவது சட்டவிரோதமானது என முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் எச்.எம். வசந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளிப் பருவக் குழந்தைகளுக்குக் கல்விச் சுமையை ஏற்படுத்தும் வகையில் தனியார் வகுப்புகளை நடத்தக்கூடாது எனத் தெரிவித்த அவர், புதிய முன்பள்ளிகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் செவனகலவில் இயங்கி வந்த முன்பள்ளி ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் பயிற்சிப் பட்டறையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் வெளிப்புறச் செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பயிர்ச்செய்கைக் காலத்தில் பெற்றோர் விவசாயப் பணிகளுக்குச் செல்லும்போது, வீடுகளில் தனியாக விடப்படும் குழந்தைகள் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

இது தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோரின் குழந்தைகளின் நலன் மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் திட்டமொன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.