இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் வட கரையோரப் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த “அர்னாப்” சூறாவளி தற்போது வலுவிழந்து, பலமிக்க தாழமுக்கமாக மாறியுள்ளது. இது இன்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து, தாழமுக்கமாக மேலும் வலுவிழக்கும். இன்று மாலை 5.30 மணியளவில் தாழமுக்கப் பிரதேசமாக வலுவிழக்கக்கூடும்.
இதன் தாக்கம் வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பிராந்தியங்களில் படிப்படியாகக் குறைவடையும். இதனால், கடல்சார் ஊழியர்களுக்கும் பல நாட்கள் மீன்பிடிக்கச் செல்பவர்களுக்குமான தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களிலும், காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

Comments 0
Be the first to comment.