—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப்பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.