நூல் அறிமுக விழாவுக்குத் தடை
அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொ**லையின் தோற்றமும், நடைமுறையும்” என்ற நூலின் அறிமுக விழாவை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நூல் அறிமுக விழா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாநாட்டு மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவிருந்தது.
இந்நிலையில், குறித்த நூலை அறிமுகம் செய்யக்கூடாது என இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments 0
Be the first to comment.