இரண்டு நாள் போராட்டம்; யானை உ**யிரிழப்பு!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானை, தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை உ**யிரிழந்துள்ளது.
குறித்த யானை இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த நிலையில், அதனைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு வைத்தியக் குழுவினர் தீவிர சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தனர். எனினும், யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உ**யிரிழந்துள்ளது.
சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த ஆண் யானை, கடந்த புதன்கிழமை (21) நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அம்பாறை மாவட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியான அவசர சிகிச்சைகளை வழங்கியிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். உயி**ரிழந்த யானையின் உடற்கூற்றுப் பரிசோதனைக்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Comments 0
Be the first to comment.