—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

குப்பை கொட்டுவோரைக் கண்காணிக்கும் கேமராக்கள்!

குப்பை கொட்டுவோரைக் கண்காணிக்கும் கேமராக்கள்!

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராகச் செயல்படுத்தப்படும் புதிய திருத்தங்களின்படி, குப்பைகளைக் கொட்டுவதற்கான அபராதத் தொகை முன்னர் இருந்த 10,000 ரூபாவிலிருந்து அதிகரிக்கப்பட்டு, ஒரு இலட்சம் ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டு முதல் பாலிதீன், பிளாஸ்டிக், மக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி எனத் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே பொதுமக்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் வழிகாட்டுதலின்படி 40 சுகாதாரத் தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 11 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கம் இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், போதிய வாகனங்களும் நிதியும் இருந்தபோதிலும் பணியாளர்களைப் பெற்றுக்கொள்வதிலும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதிலும் பெரும் சவால்கள் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் தங்களது குப்பைகளை முறையாகச் சேமித்து, பிரதேச சபையின் குப்பை சேகரிப்பு வாகனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் மண்ணை அழகுபடுத்தவும் சுத்தமாகப் பேணவும் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அரசாங்கம் அனைவரும் இணைந்து கூட்டாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.