இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை நேற்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், தற்போதைய பிராந்திய அரசியல் நிலவரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
அத்துடன், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், எதிர்காலப் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இந்தியத் தூதுவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரும் கவனம் செலுத்தினர்.

Comments 0
Be the first to comment.