—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இரு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மாணவி

தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில், திருச்சி அணி சார்பில் பங்கேற்ற ஈழத்தமிழ் மாணவி ஜெ. தனுஜா, கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பணப்பரிசுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள் கடந்த 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இந்தப் போட்டியில் திருச்சி மாவட்ட அணி சார்பாகக் கல்லூரி மாணவர்களுக்கான இரு வெவ்வேறு நீச்சல் பிரிவுகளில் களமிறங்கிய ஈழத்தமிழ் மாணவி ஜெ. தனுஜா, இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தார்.

இதன் மூலம் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இந்திய ரூபாய் பணப்பரிசையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, தனுஜாவின் 10 வயதுடைய இளைய சகோதரியான டிலாஜினியும் திருச்சி அணி சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கான போட்டியில் பங்கேற்றிருந்தார்.

வயதில் மூத்தோருக்கான இந்தப் பிரிவில் போட்டியிட்ட போதிலும், 100 மீற்றர் பட்டாம்பூச்சி நீச்சல் பிரிவில் 11ஆம் இடத்தையும், 200 மீற்றர் பட்டாம்பூச்சி நீச்சல் பிரிவில் 9ஆம் இடத்தையும் பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயக்குமார் – அருள்ஜோதி தம்பதியரின் புதல்விகளே தனுஜா மற்றும் டிலாஜினி ஆவர்.

இவர்கள் இருவரும் நீண்டகாலமாகப் பாடசாலை, கல்லூரி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய மட்டத்திலான இந்திய நீச்சல் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுப் பல சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.