—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

புதிய சட்டமூலங்கள் குறித்து சஜித் எச்சரிக்கை

புதிய சட்டமூலங்கள் குறித்து சஜித் எச்சரிக்கை

அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் புதிய சட்டமூலங்கள் காரணமாக, நாடு ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி, ஒரு கட்சி ஆட்சியைக் கொண்ட பொலிஸ் இராஜ்ஜியத்தை நோக்கி நகர்கின்றதா என்ற பாரிய அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இஷார ஹர்ஷண என்ற இளைஞர், பொலிஸ் காவலில் இருந்தபோதே உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து வெளியிட்ட விசேட காணொளியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 (4) உறுப்புரையின்படி, பொலிஸ் காவலில் உள்ள ஒருவரின் உயிர், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் சட்டரீதியான கடமையாகும்.

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான, சுதந்திரமான மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்” என்றார்.

அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலங்கள் குறித்து எச்சரித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசால் கொண்டுவரப்படவுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆகியன மக்களின் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியாகக் கூடும் உரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்கள் ஊடாகச் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தவே அரசு முயற்சிக்கின்றது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக இருக்க வேண்டுமே தவிர, ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமையக்கூடாது.

அரசின் இத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகளைத் தோற்கடிப்பதற்குத் தேவையான உயர்மட்டத் தலைமைத்துவத்தை மக்கள் சக்தியுடன் இணைந்து வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்” என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.