இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் காயம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் நேற்று (27.10.2026) மாலை சுமார் 6 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.