—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சேதமடைந்த ரயில் நிலையம் மீள்கட்டமைப்பு

சேதமடைந்த ரயில் நிலையம் மீள்கட்டமைப்பு

டித்வா புயலின்போது வட்டவளை பிரதேசத்தில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையத்தை, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த ரயில் நிலையத்தின் பிரதான கட்டடத்தின் பின்புறம் அமைந்திருந்த பாரிய மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ரயில் நிலையக் கட்டடத்தில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டு, கட்டடம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதனையடுத்து, சேதமடைந்த ரயில் நிலையத்தின் பிரதான கட்டடத்தை முழுமையாகப் புனரமைக்கும் பொறுப்பு இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவிடம் ரயில்வே திணைக்களத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வட்டவளை ரயில் நிலையத்தின் சரக்குக் களஞ்சியக் கட்டடத்தைத் தற்காலிக ரயில் நிலையமாகப் பயன்படுத்தும் நோக்கில், ரயில்வே திணைக்களத்தின் பொறியியல் பிரிவினால் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.