—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்தார் நந்தகுமார்!

அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தற்போதைய அட்டன் டிக்கோயா நகரசபை உறுப்பினருமான அழகமுத்து நந்தகுமார், இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து கொண்டார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 27ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, கொழும்பு சௌமிய பவனியில் இன்று (30) நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் அவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து கொண்டார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அவர் கட்சியுடன் இணைந்து கொண்டார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.