இலங்கையர்கள் மூவர் சிக்கினர்!

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் கள்ளப்படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த மூவர் ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸாரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இலங்கையர்களைச் சட்டவிரோதமாகப் படகு மூலம் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக 1.10 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும், தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர்கள் டெல்லிக்குச் சென்று போலி கடவுச்சீட்டு மூலம் லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments 0
Be the first to comment.