—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மாணவர் மீது தாக்குதல்: அதிபருக்கு விளக்கமறியல்

மாணவர் மீது தாக்குதல்: அதிபருக்கு விளக்கமறியல்

ஹட்டன், நோர்வூட் பிரதேசத்தில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாடசாலை அதிபரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவரை அதிபர் தாக்கிக் காயப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, மாணவனின் பெற்றோர் அவரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

பின்னர், பொலிஸார் சம்பவம் தொடர்பான விடயங்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட அறிவித்தலின்படி, கடந்த 20ஆம் திகதி அதிபர் தனது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, அவரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.