—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இளைஞரை கொ**லை செய்து உடலை எரித்த கொடூரம்!

இளைஞரை கொ**லை செய்து உடலை எரித்த கொடூரம்!

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரைக் கொ**லை செய்து, அவரது உடலை எரித்து, எலும்புத் துண்டுகளைக் களனி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 32, 37 மற்றும் 46 வயதுடையவர்களாவர். இவர்கள் வெல்லம்பிட்டி மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி குறித்த இளைஞர் காணாமல்போனமை தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன் மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு (CCDB) முன்னெடுத்திருந்தது.

விசாரணைகளின்போது, 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கிராண்ட்பாஸ், கம்பி கொடுவவத்தை பகுதியில் உள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையமொன்றில் குறித்த இளைஞர் சிலருடன் இணைந்து மது அருந்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

அவர் காணாமல்போனதைத் தொடர்ந்து, அவருடன் மது அருந்திய குழுவினர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் அடிப்படையில், கடந்த 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி மாபோல – களு பாலம் அருகிலும் மஹர பகுதியிலும் வைத்து இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனப் பழுதுபார்க்கும் நிலையத்தில் வைத்து குறித்த இளைஞர் கொ**லை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

பின்னர், அவரது ச*டலம் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெப்பிலியவல பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எஞ்சிய எலும்புத் துண்டுகள் மற்றும் ஏனைய உடற்பாகங்கள் கொஸ்கம – ரன்வல பாலத்திற்கு அருகிலுள்ள களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பூகொட நீதவான், வதுபிட்டிவல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கம்பஹா குற்றவியல் தளப் பரிசோதனை அதிகாரிகள் முன்னிலையில் பெப்பிலியவல பகுதியில் களப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, உந்துருளி சாவி, தாயத்து, சில எலும்புத் துண்டுகள் மற்றும் எரிந்த கூடாரத் துணியின் பாகங்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டு சான்றுப் பொருட்களாகப் பொறுப்பேற்கப்பட்டன.

அதே தினம் ரன்வல பாலத்திற்கு அருகிலுள்ள களனி ஆற்றிலும் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று (2) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.